சுவாமிமலையில் படுத்திருந்த பக்தர்களுக்கு நேர்ந்த சம்பவம்.. கோயில் நிர்வாகத்தின் ரியாக்ஷன் என்ன?

Author: Hariharasudhan
21 October 2024, 1:08 pm

சுவாமிமலையில் தங்கி இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இரவுக் காவலர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகப் பெருமானின் 4ஆம் படை வீடான இங்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதேநேரம், நேர்த்திகடன் செலுத்துவதற்காக வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் தங்கி, காலையில் நேர்த்திக்கடனை முடித்துவிட்டு, சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்வர். ஆனால், கரோனா காலத்திற்குப் பிறகு, கோயில் வளாகத்தில் யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. மாறாக, கோயிலின் தெற்கு பகுதியில் உள்ள கோபுர வாசலில் உள்ள பிரதான மண்டபத்தில் தங்கி சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

Swamimalai

அந்த வகையில், கிருத்திகை தினமான கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இரவு இந்த மண்டபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அப்போது, கோயிலின் கதவின் கீழ் இருந்து தண்ணீர் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எழுந்த பக்தர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஒரு பெண்ணுக்கு சாமி வந்து ஆடியுள்ளார்.

இதையும் படிங்க: கருணாநிதி குடும்பத்தில் ஆண் பிள்ளை பிறந்தால்.. அம்பையில் இபிஎஸ் ஆவேச பேச்சு!

மேலும், இரவு நேரத்தில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கக் கூடாது எனவும் கோயில் பணியாளர்கள் கூறியதாக தெரிகிறது. பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாணது. இதனையடுத்து, இது குறித்து விளக்கமளித்த கோயில் துணை ஆணையர் உமாதேவி, கோயிலில் சம்பவத்தன்று தங்கியிருந்த பக்தர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கவில்லை என்றார்.

அதேநேரம், கோயிலின் உள்ளே இருந்த குழாயில் இருந்த தண்ணீர் வெளியேறி, வளாகத்தில் படுத்துறங்கிய பக்தர்கள் மீது விழுந்தது என்றும் கூறினார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோயில் இரவுக் காவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் பனியிட மாற்றம் செய்து சுவாமிமலை திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி உத்தரவிட்டுள்ளார்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?