பாஜக கூட்டணியில் நிதிஷ், சந்திரபாபு விலகினால்.. திமுக இணையும் : கொளுத்தி போடும் சீமான்!
Author: Udayachandran RadhaKrishnan18 செப்டம்பர் 2024, 7:23 மணி
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அரங்கினுள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அரங்கினுள் செல்பவர்களிடம் செல்போனை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் இரட்டைமலை சீனிவாசன் நினைவை போற்றி வகையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்: திமுக 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வாற்றைய தவிர வேறு எதையை வைக்கவில்லை, வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.
விஜய் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறேன் அதேபோல் முத்துராமலிங்க தேவர் இரட்டை மலை சீனிவாசன் வேலுநாச்சியார் திருவிக உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும், பெத்தவன் ஒருத்தனாக இருக்க வேண்டும், தலைவன் எங்கள் இரத்ததில் இருக்க வேண்டும்.
என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார் போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை, விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் ,
பெரியரை தமிழ் தேசியத்தின் எதிராயாக நான் பார்க்கலை , ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது, பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.
ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். கட்சியிலிருந்து அவர்களாக போகிறார்கள் அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை, அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள், பட்டுபோன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும் அதை பொருட்படுத்த வேண்டாம்.
தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும், நமது வரலாறு மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, விஜய் செய்தியாளர்களை சந்திக்கும் போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.
நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயிடும் பாஜக ஆதரவை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.
உதயநிதி துணை முதலமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறார் அவருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா ஒரே உடையை ஒரு வாரம் உடுத்தி பள்ளிக்கு சென்று இருப்பாரா, உணவு கிடைக்காமல் பழைய சோறு கொண்டு இருப்பாரா? உதயநிதி நடத்திய கால்பந்தயத்தில் உள்ளூர் நபர்கள் யாரேனும் பங்கேற்று வெற்றி பெற்றார்களா ஒரு மாற்றுத்திறனாளிதான் தங்கப் பதக்கத்தை வென்று நமக்கு பெருமை சேர்க்க வேண்டியது. பானை ஒன்றுதான் ஆனால் வெளியே உள்ள தோற்றமும் உள்ளே உள்ள தோற்றமும் வேறு வேறு நாங்கள் உள்ளே உள்ள தோற்றத்திற்காக பேசக்கூடியவர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆர் எஸ் பாரதியையும் டி கே எஸ் இளங்கோவனையும் அனுப்புவதற்கு பதிலாக டி ஆர் பாலுவையும் ஜெகனையும் தான் அனுப்ப வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்றால் அவர்கள் அங்கு போய் என்ன பேசுவார்கள் மதுவை ஒழிக்க வேண்டும் என்றா பேசுவார்கள்.
ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.
2026லும் தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு என்று தெரிவித்தார்.
0
0