மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
5 November 2024, 8:12 pm

தெலுங்கு பேசும் பெண்கள் தொடர்பாக கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை: சென்னையில் பிராமணர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி நேற்றைய முன்தினம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கஸ்தூரி மேடையில் பேசுகையில், “சுமார் 300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை” என பேசினார்.

இவ்வாறு தெலுங்கு பேசும் பெண்களை சர்ச்சையாக பேசியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதற்கு திமுக உள்ளிட்ட ஆளும் கட்சி தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தேனி, திருச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் குறைந்தபட்சம் 4 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய கஸ்தூரி, “நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. தெலுங்கு மக்கள் பற்றி தவறாகவும் பேசவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களைச் சொன்னால், அதை தெலுங்கு மக்களைச் சொன்னதாக திசை திருப்பி விட்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனக் கூறி இருந்தார்.

இது மட்டுமல்லாது, நேற்று இரவே தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற சிறு விவாத நிகழ்ச்சியில் கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறுவதாக கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்.

KASTHURI

இந்த நிலையில், இன்று மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக கஸ்தூரி வெளியிட்ட அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. அவர்கள் என் தீர்வை மட்டும் கடினமாக்கினார்கள். இருப்பினும், இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அடுத்துள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் தாக்கங்களை பொறுமையாக விளக்கினார்.

நான் என் பாரத மாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன். தெலுங்கில் ஒரு சிறப்புத் தொடர்பு இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!

நாயக்க மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜகிருதிகள் பாடி புகழ் பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவன் நான். தெலுங்கில் என் திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தைக் கொடுத்துள்ளனர்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள், குறிப்பிட்ட சில நபர்களுக்கு சூழல் சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவதோ அல்லது புண்படுத்துவதோ எனது நோக்கமாக இருந்ததில்லை. கவனக்குறைவாக ஏதேனும் மோசமான உணர்வு ஏற்பட்டால் வருந்துகிறேன். அனைவரின் நலன் கருதி, 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கில் உள்ள அனைத்து சொற்களையும் திரும்பப் பெறுகிறேன்.

அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை திசை திருப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!