தோனி வந்தாச்சு.. அடுத்த மாஸ் கம்பேக் வீரர்கள் யார் யார்?

Author: Hariharasudhan
1 November 2024, 12:22 pm

சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி விளையாடுவது உறுதியான நிலையில், சில முக்கிய வீரர்கள் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி: மிகப்பெரும் கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டிருப்பது ஐபிஎல் போட்டிகள். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் 2025, மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் 18வது ஐபிஎல் சீசனில் அணிகள் தக்க வைத்துள்ள பட்டியல் நேற்று ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட்டது.

இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கும், மதீஷா பதிரானாவை 13 கோடி ரூபாய்க்கும், சிவம் துபே 11 கோடி ரூபாய், ரவீந்திர ஜடேஜா 18 கோடி ரூபாய் மற்றும் மகேந்திர சிங் தோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம் எஸ் தோனி தக்க வைக்கப்பட்டு உள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 43 வயதான தோனி மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் எப்போதும் தனி இடத்தை அளித்து உள்ளனர். அதன் பிரதிபலிப்பே இது என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அனிருத் இடம்பெற்ற வீடியோ ஒன்றையும் சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்து இருந்தது.

ASHWIN

அதனையும், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்படவில்லை. எனவே, அவர்கள் மூவரும் மெகா ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க: வரலாற்றை உருவாக்கிய நியூசிலாந்து.. மாற்றிய இந்தியா.. டெஸ்ட் தொடர் சாதனை!

இதனிடையே, ரவிச்சந்திரன் அஸ்வின், டூ பிளசிஸ், சாம் கரண் மற்றும் நடராஜன் ஆகியோர் சென்னை சூப்பர் கின்ஸ் அணியால் மெகா ஏலத்தில் எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவர் மீதும் ஒருவித கிரேஸ் உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!