பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்த மாணவர் சஸ்பெண்ட் : பாடம் சொல்லி தர முடியாது என ஆசிரியர் கறார்..!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 1:42 pm

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு கொண்டு வந்த டிபனில் அசைவ உணவு இருந்ததாக கூறி அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்ரோஹி நகர முஸ்லிம் கமிட்டி மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்ட பள்ளி முதல்வரைகைது செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!