அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்.. பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 1:18 pm

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ற்படுத்தியது.இந்நிகழ்ச்சியை கண்டித்து, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • sai abhyankkar composing music 8 big productions ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…