திமுகவிடம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம் : திருமா பாணியில் காங்., எம்பி போட்ட குண்டு!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 6:56 pm

ஆட்சி, அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டும் என திமுக அரசிடம் வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 286 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்பதை நினைக்கிறோம்.

உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்போது மற்ற விசயங்களை பேசுவோம். அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆட்சிக்கு வர வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்க இருக்கிறோம் மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது.

அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே விரும்புகிறார்கள் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். மது உட்பட அனைத்து விதமான போதைப் பொருட்களும் இல்லாத சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம் என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!