காரை வீட்டுக்கு எடுக்கலாம்… சென்னை மக்களுக்கு இனிப்பான நியூஸ்!

Author: Hariharasudhan
16 October 2024, 10:40 am

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. எனவே, தற்போது சென்னையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. எனவே, தற்போது சென்னையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நல்லூரில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கு – வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும், நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால், இன்று சென்னையில் மிதமான முதல் கனமழைக்கான வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.

அது மட்டுமல்லாமல், சென்னை வானிலை மையம் விடுத்த அறிக்கையின்படி, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், இன்று மிதமான முதல் கனமழை மட்டுமே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை தங்களது வீடுகளுக்கு உரிமையாளர்கள் எடுத்துச் செல்லலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டர் என்ற அளவில் அதி கனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, திருவிக நகர், கொளத்தூர் மற்றும் அம்பத்தூரில் 22 சென்டிமீட்டர் என்ற அளவில் அதிக கன மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்? சென்னைக்கு பேரதிர்ச்சி!

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 172

    0

    0