தமிழகத்தில் மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள் : +2 தேர்வு முடிந்த நிலையில் அண்ணா பல்கலை., கீழ் இயங்கும் கல்லூரிகள் எடுத்த முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 10:02 pm

சென்னை : தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் கல்வி சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இந்த இணைப்புக்கு கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இணைப்பை புதுப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி புதுப்பித்துக் கொள்ளாத கல்லூரிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். தமிழகத்தில், சமீப காலமாக பொறியியல் படிப்புகள் மீதான அதாரவான மனோபாவம் சற்று குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்தது. உதரணமாக, கடந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50%க்கும் குறைவானதாக இருந்தது.

பல கல்லூரி நிறுவனங்களில் அடிப்படை எண்ணிக்கை அளவிலான மாணவர்கள் கூட சேரவில்லை. இந்த ஆண்டுக்கான கல்லூரி புதுப்பித்தலில் 10 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை புதுப்பிக்கவில்லை.

எனவே, இந்த 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையைத் தொடரப்போவதில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?