10ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தால் பாஸ்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2024, 8:08 pm

100 மதிப்பெண்களுக்கு 35 எடுத்தால் பாஸ் என்பதை மாற்றி 20 எடுத்தாலே பாஸ் என முதலமைச்சர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.

100க்கு 35 எடுத்தால் பாஸ் என்பது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது.

ஆனால் மகாராஷ்டிராவில் 35 மதிப்பெண் எடுக்கவே மாணவர்கள் திணறுவதால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைவாகவே உள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்கள் பெயில் ஆகிவிட்டால், தொடர்ந்து தேர்வை எழுத தயக்கம் காட்டுகின்றனர். பலர் கல்வியை கைவிடுகின்றனர்.

இதையும் படியுங்க: அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்னை விஸ்வரூபம்: பதவியை பறிக்க தயாராகும் முதல்வர்!!

இதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் மட்டும் 35க்கு பதில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ் என அறிவிக்க மாகராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

ஆனால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளை அவர்கள் தொடர முடியாது என்றும், கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!