10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு : ஜுன் 23ல் வெளியாகிறது ரிசல்ட்..?

Author: Babu Lakshmanan
2 March 2022, 10:38 am
Quick Share

சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

கடந்த 2 ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத்தேர்வு இந்த முறை நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதன்படி, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. ஜுன் 23ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜுலை 17ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறும்.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் மே 4ம் தேதி வரை செய்முறை தேர்வும், மே 5ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை எழுத்துத் தேர்வும் நடைபெற இருக்கிறது.

மாணவர்கள் அச்சப்படாமல் தேர்வை எழுத வேண்டும். எந்தத்துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப துறைகளை தேர்வு செய்து பயில வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்காக படிக்கக் கூடாது.

மாணவர்கள் எழுதும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்குவது எங்களின் கடமை. அதனை கண்டிப்பாக நாங்கள் செய்வோம். உங்களுடைய திறமையை நமது பள்ளிகளில் காண்பிக்க வேண்டும். உங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் 100 சதவீத செயல்பாட்டை தொடர்ந்து வழங்க வேண்டும், எனக் கூறினார்.

Views: - 598

0

0