சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறப்பு..!!

Author: Rajesh
13 March 2022, 8:58 am
metro train - updatenews360
Quick Share

சென்னை: திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம்-ன் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவுற்றது. இதனையடுத்து மெட்ரோ ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், அவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. இதன்படி இந்த இரு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும். இந்த மைல் கல்லையும் தாண்டி புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். இந்த சாதனை தொடர ரயில் பயணிகளின் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1041

0

0