பாறைகள் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி : கல்குவாரியில் டிரில்லிங் செய்த போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 7:14 pm

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் கன்சக்கசெர்லா மண்டலம் பரிதலா அருகே உள்ள டோனபண்டா மலையில் பவன் கிரஷருக்கு சொந்தமான குவாரியில் குண்டுவைத்து பாறைகளை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர்.
அவ்வாறு பெரிய பாறைகளை குண்டு வைப்பதற்கு வெடி மருந்து நிரப்ப துளைகளை போடும் பணியில் ஜி கொண்டூர் மண்டலம் செருவு மாதவராவ் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த டிரில்லிங் உரிமையாளர் பத்துலா துர்கா ராஜ் (23), ஜி கொண்டூர் மண்டலம் செவத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிரில்லர் பிபி நாயக் (42), சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ராம் தேவ் பாகேல் (33) ஆகியோர் ஈடுப்பட்டு வந்தனர்.

பெரிய பாறைகளில் துளைகள் இடும்போது ஏற்கனவே குண்டு வைத்ததால் தளர்வான பெரிய பாறைகள் அனைத்தும் திடீரென மலையிலிருந்து இவர்கள் நின்று இருந்தவர்கள் மீது விழுந்தன.

இதில் துர்கராஜ், பீபி நாயக், ராம் தேவ் பஹேல் ஆகிய மூவரும் பெரிய பாறைகளில் இடுக்குகளில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எனினும், அவர்களுடன் பணிபுரிந்த மற்றொரு நபர் இந்த பகுதியில் இருந்து விலகி இருந்ததால், அவர் காயமின்றி தப்பினார். தகவல் அறிந்த கஞ்சிகச்சார்லை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குவாரி உரிமையாளர்கள் ஒத்துழைப்புடன், பாறாங்கற்களுக்கு அடியில் சிக்கிய சடலங்களை பெரிய இயந்திரங்கள் மூலம் பாறைகளை சடலத்தை வெளியே எடுத்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வயிற்று பிழைப்பிற்காக வரும் தொழிலாளர்கள் குவாரிகளில் வெடிகுண்டு வைக்கும் போதும் பணியில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே அரசு கவனம் செலுத்தி குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?