சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 7:41 pm
Nain
Quick Share

சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தாம்பரம் ரயில்நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சதீஷ் (33) நவீன் (31), பெருமாள் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… விமான நிலையங்கள் ALERT : சென்னையில் பலத்த பாதுகாப்பு!

இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்திருந்தனர். ஆனால், ஆஜராவதற்கு அவகாசம் கோரியிருந்தார்.

இதையடுத்து நேற்று தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனை சந்தித்து 2வது முறையாக சம்மன் அளித்துள்ளனர். அதேசமயம், ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளனர்.

நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த 4 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தரப்பில் விரைவில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 126

0

0