எப்போ கல்யாணம்? கேட்ட அரசு ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்: கட்டையால் அடித்துக் கொலை…!!

Author: Sudha
5 August 2024, 3:02 pm

இந்தோனேஷியாவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய சிரேகர். இவரது அண்டை வீட்டில் வசித்து 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும்போதெல்லாம், ”எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக் கடந்த ஜுலை 29 ஆம் தேதி அசிம் வீட்டிற்குள் விடாப்பிடியாய் நுழைந்து அவரை கட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த அசிமின் மனைவி போலீசாரிடத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் சிரேக்கை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் சிரேக்கிடம் விசாரித்ததில், ”திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு, என்னை கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதனால்தான், அவரை கொன்றேன். ” என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?