தமிழகத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் : தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 11:50 am
9th All Pass - Updatenews360
Quick Share

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இந்த வருடம் மட்டுமே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதுவும் காலம் தாமதமாக வகுப்புகள் தொடங்கப்பட்டன. குறுகிய கால இடைவெளியில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடைபெற்றன.

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நடைமுறை ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் சிந்தனைகள், பொருளாதாரம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்த வேண்டும் என்றும், ஆண்டு இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல் பாஸ் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Views: - 647

0

0