நாக தேவி சிலை மீது படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு : பூஜை செய்து பக்தர்கள் பக்திப் பரவசம்.. சிலிர்க்க வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 2:30 pm

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம், ஒடேலா கிராமத்தில் உள்ள பார்வதி ஜம்புலிங்கேஸ்வர சாமி கோவில் வளாகத்தில் உள்ள நாக தேவதை சிலை மீது நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியபடி நின்றது.

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் போட்டோ வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவு செய்தனர். நாக தேவதையின் சிலை மீது பாம்பு இருப்பதை பார்த்த பக்தர்கள் சிவபெருமானின் மகிமை எனக்கூறி சிறப்பு பூஜை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரளாக திரண்டு வந்து பார்வையிட்டனர். ஆனால் பாம்பு அங்கிருந்து நகரவில்லை. பக்தர்கள் அதனை விரட்ட முயன்றனர்.

ஆனாலும் அந்தப் பாம்பு போகவில்லை. பாம்பு சிலையுடன் இணைந்திருந்தது. பாம்பு வெகுநேரம் செல்லாததால், பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாம்பை பிடித்து தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் மீண்டும் இந்த பகுதிக்கு பாம்பு வர வாய்ப்பு உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 210

    0

    0