கோவை ஈஷாவில் பயிற்சி வகுப்பு சென்ற பெண் மாயம் ; வெளியானது பகீர் சிசிடிவி காட்சிகள்… கணவன் அளித்த பரபரப்பு புகார்.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 2:42 pm

கோவை ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த மனைவியை காணவில்லை என்று ஆலந்துறை காவல் நிலையத்தில் கணவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பழனிகுமார் (40). தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபஸ்ரீ (34). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியினருக்கு 11 வயதில் மகள் உள்ளார். சுபஸ்ரீ கடந்த நான்கு வருடத்திற்கு முன்பாக ஈஷா யோகா மையத்துக்கு வந்து யோகா பயிற்சி பெற்றுள்ளார்.

மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் காலை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். பின்னர் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். பின்னர், அவரை அழைத்துச் செல்ல அவருடைய கணவர் பழனிகுமார் ஈஷா யோகம் வந்துள்ளார். பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால், அதிர்ச்சியடைந்த கணவர் வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் நேற்று காலை 9.30 மணிக்கு கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி டிரைவரை விசாரணை செய்த போது, அவர் சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.

யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளே சென்ற பெண் பை மற்றும் கைபேசி ஆகியவையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் வெளியில் வரும் பொழுது பெண்ணின் கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை கலர் உடை அணிந்து தெருவில் ஓடக்கூடிய காட்சிகள் தெளிவாக சிசிடிவியின் வாயிலாக பதிவாகியுள்ளது.

https://player.vimeo.com/video/782837561?h=0c9fc6ac11&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

பெண்ணிற்கு உள்ளே என்ன நடந்தது..? எதற்காக ஓடினார் மற்றும் இரண்டு நாட்களாக பெண் வீடு திரும்பாததன் காரணம் என்ன..? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!