சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை பலி… இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதி பயங்கர விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 5:36 pm

டிவி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் கல்யாணி குராலே. இவர் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் வசித்து வந்தார். டிவி நிகழ்ச்சிகளிலில் வாய்ப்பு குறைந்ததால் கோலாப்பூர் அருகே ஹலோண்டி என்ற இடத்தில் சமீபத்தில் ஓட்டல் ஒன்றை திறந்திருந்தார்.

வழக்கமாக இரவு ஓட்டலை மூடிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கோலாப்பூர் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் இரவு 10.30 மணிக்கு தனது ஓட்டலை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வாகனம் சாங்கிலி-கோலாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த காங்க்ரீட் மிக்ஸர் ஏற்றி வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கல்யாணி பலத்த காயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீசார் கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். போலீசார் லாரி டிரைவரை கைது செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…