உடை மாற்றும் அறையில் வைத்து…. எனக்கு நீதி வேண்டும் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 6:13 pm

டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரில், ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, “டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24-ந்தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்” என்றும் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:- கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்” என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?