எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும்… டெல்லி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 2:14 pm

எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும்… டெல்லி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் பிரசாரத்தின் போது இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணமும் தொடரும் என்று நாடு நம்புகிறது.

p> மேலும் படிக்க: 3வது முறையாக மோடி வந்தாலும் வரலாம்.. ஆனால் ; காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் TWIST!!

யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியத்தை எனது அரசாங்கம் ஊக்குவித்தது. உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது. நமது கலாச்சார பிம்பம் பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. உலகின் பழமையான நாகரிகம் மட்டுமல்ல, மனித குலத்துக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது என அவர் கூறினார்.

  • sai abhyankkar composing music 8 big productions ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…