இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 11:44 am

இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்!

சென்னையில் கோயம்பேடு பகுதியில் 31 வயதான இளம்பெண் கணவர் மற்றும் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். அந்த பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் இரவு நேர சவாரிக்காக பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு தனது மகள்களுடன் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண், வெக்கை என்பதால் காற்றுக்காக கதவை திறந்தபடி தூங்கியுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த போதை ஆசாமி வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி தனது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி? பகீர் கிளப்பிய காடேஸ்வரா சுப்பிரமணியம்!

தொடர்ந்து அந்த பெண் கூச்சலிடவே கத்தியை காட்டி குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அந்த நபர் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோட முயன்ற போது, பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்ற்கு வந்த போலீசார், பலாத்காரம் செய்த ஜான் பால்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!