ரஜினிக்கு சிகிச்சை அளிக்க நேற்று மாலையில் இருந்தே தயாரான அப்பல்லோ… பரபரப்பு தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan1 அக்டோபர் 2024, 10:57 காலை
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல் வெளியாகும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு கூலி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வேட்டையன் பட ரிலீசுக்கு காத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி இன்று காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
பின்னர் அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்களும் வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை முதலே அப்பல்லோ மருத்துவமனைக்கு விஐபி ஒருவர் வரஉள்ளதாக மருத்துவக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இன்று காலை தான் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல் வெளியானது.
வயிற்றுக்கு அருகே உள்ள ரத்த நாளம் பெரிதாகி உள்ளதால் அதற்கான சிகிச்சை என சொல்லப்படுகிறது. ஐசியூ பிரிவில் 24 மணி நேரம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், 3 அல்லது 4 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் இது சாதாரண பிரச்சனைதான் பயப்படும் வகையில் இல்லை என மருத்துவக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
0
0