‘விரைவில் நாம் சந்திப்போம்!’…. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன நடிகர் விஜய்..!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 12:47 pm
Quick Share

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டது ஏன்..? யானை வழித்தடங்கள்‌ வரைவு அறிக்கையில் தில்லுமுல்லு ; திமுக அரசு மீது இபிஎஸ சந்தேகம்

1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் ; வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 172

0

0