அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய்..? அம்பேத்கர் பிறந்த நாளில் பிள்ளையார் சுழி.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 1:01 pm

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அட்வைஸ்களை கொடுத்து அனுப்பினார்.

எனவே, விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற் போலவே, விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, ஒன்றரை மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து சாதனை படைத்தனர். தற்போது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டி விட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 14ம் தேதியான நாளை, அம்பேத்கரின் 132வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார். மாவட்டந்தோறும் நடக்கும் விழாவில் நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், விவசாய அணி, மகளிர் அணி, இளைஞரணி ஆகியவ நிர்வாகிகளும் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலின் மூலம் விஜய் மக்கள் இயக்கத்திற்கு மக்களிடையே இருக்கும் ஆதரவை தெரிந்து கொண்ட நடிகர் விஜய், இனி பட்டியலின மக்களின் ஆதரவை பெறும் முயற்சியாக, அம்பேத்கர் பிறந்த நாளில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உணர்த்துவதாக விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!