சினிமாக்காரனுக்கு பக்கம் பக்கமா வசனம் பேசுறது புதுசு இல்ல – விஜய்யின் பேச்சுக்கு குவியும் விமர்சனங்கள்!

Author:
28 October 2024, 1:49 pm

தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு விஜய் தலைமையில் நேற்று அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்ரமாண்டி வி -சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது .பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

மாநாட்டில் பேசிய கட்சி தலைவரான விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக அரசியல் எதிரிகளாக நான் திமுகவை தான் பார்க்கிறேன் என நேரடியாக அவர் தாக்கி பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Actor Vijay

இதற்கு அரசியல் கட்சி தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.மேலும் இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக சித்தாந்த எதிரி எனவும் திமுக அரசியல் எதிரி என்றும் கூறி இருந்தார்.

மேலும் இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் ஒரு பக்கம் திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு மறுபக்கம் திமுகவை எதிர்க்கிறேன் அவர்கள் தான் என்னுடைய அரசியல் எதிரி என கூறி இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாநாட்டில் விஜய்யின் கருத்துக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் அரசியல் வட்டாரத்திலும் அரசியல் தலைவர்கள் இடையேயும் மிகவும் மிகப்பெரிய சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் தொண்டர்களின் நலன் கருதி விஜய்யை தவிர மற்ற யாரும் அதிகம் பேசவில்லை. விஜய் அறிவித்த அவரது கட்சியின் கொள்கைகள் பாதி திமுகவின் முழக்கமாகவே இருந்தது. ஆனால் திமுக தான் அரசியல் எதிரி என்று அவர் தெரிவித்திருந்தார் .

vijay

திராவிட மாதிரியை விமர்சித்த விஜய் பாஜக என்று பெயரையே சொல்லவில்லை. பாஜகவை திமுக பாசிசம் என்று சொல்கிறது அப்படி என்றால் நீங்க என்ன பாயாசமா என பன்ச் டயலாக் பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சு மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருந்தது. இருந்தாலும் அரசியல் கட்சிகள் அவரது பேச்சினை கடுமையாக விமர்சித்து வருகிறது.

விஜய் அரசியலில் இறங்கி தன்னுடைய செயல்பாட்டை காட்டினால் தான் அவர்கள் யார் என்ன எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறார்கள் என்ற ஒரு தெளிவு புரியும் என கூறி வருகிறார்கள். இதனால் விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!