பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு இபிஎஸ் வைத்த வேண்டுகோள்… நெகிழ்ந்து போன தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 9:15 am
eps - updatenews360
Quick Share

சென்னையில் இன்று நடக்கும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக, கூட்டம் நடக்கும் இடத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனித்தனியே காரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை வரவேற்க செண்டை மேளம், தாரை தப்பட்டை, ஆட்டம், பாட்டம் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி இன்று ஏற்பார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் தடையாக அமைந்துள்ளது. அதேவேளையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தற்போது தங்களுக்கு வெற்றி கிடைத்ததாக ஓபிஎஸ் தரப்பினரும் கூட்டம் நடக்கும் அரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க வரும் உறுப்பினர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

அதாவது, இன்று நடைபெறவுள்ள கழக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள். வருகை தரவுள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பத்திரமாக பயணித்து, கூட்ட அரங்கிற்கு வருகைதந்து, கூட்டத்தை சிறப்பித்து, அவரவர் இல்லங்களுக்கு பத்திரமாக திரும்ப வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 458

0

0