பயிர் கடனுக்கு ரூ.14,000 கோடி… விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு : வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 12:49 pm
Quick Share

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :-

ஒரு லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.11 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழு
விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க மின்னணு உதவி மையங்களை செயல்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு தொடங்கப்படும்

பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு
நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்க 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம்
தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம்
தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு
3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
வேளாண் விரிவாக்க அலுவலர் கிராம அளவில் வேளாண் பணிகளை ஒருங்கிணைப்பார் – தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்
குறைந்த சாகுபடியில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்
கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.54 கோடி ஒதுக்கீடு
சேலம், அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 2,500 ஹெக்டராக உயர்த்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு – தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை கற்றறுத்தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் முறை கற்றுத்தரப்படும்
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களை இணைத்து மிளகாய் மண்டலம் உருவாக்கப்படும்
ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1000 ஹெக்டேர் சீமைக் கருவையை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு திட்டம்

வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு
தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு
1,000 ஹெக்டேரில் சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க பின்னேற்பு மானியம் வழங்க ரூ.2.5 கோடி நிதி
நுண்ணீர் பாசன முறையை நிறுவ மானியம் வழங்க ரூ.450 கோடி ஒதுக்கீடு
தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறை

ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 பண்ணை குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகம்
மா, பலா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகளை விநியோகிக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு – தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகளை சாகுபடி செய்ய நடவடிக்கை
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க திட்டம்
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

பனை மரம் ஏறும் இயந்திரங்களை கண்டுபிடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும்
விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் ; பனை ஓலை தயாரிக்க மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும்
விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை இயந்திரங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
ரூ.1 கோடி செலவில் 500 இளைஞர்களுக்கு வேளாண் கருவிகளை இயக்க பயிற்சி வழங்கப்படும்

கடைமடைக்கும் காவிரி நீர்செல்ல 1146 கி.மீட்டர் தொலைவு வாய்க்கால்களை தூர்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனி திட்டம்
25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு
உழவர் சந்தைக்கு வரும் உழவர்களுக்கு சிற்றுண்டி, மூலிகை சூப் வழங்க நடவடிக்கை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர்ரோஜா, கோட்டைமலை கத்தரி, மதுரை செங்கரும்பு உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திக்குளம் மிளகாய் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சிகங்கள் மேம்படுத்தப்படும்
பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலை.,யில் உள்ள அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்
சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை ; பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75 ஊக்கத்தொகை
25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை

கூட்டுறவு பயிர்க்கடன்கள் வழங்க ரூ.14,000 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு
காவிரி டெல்டா பகுதியில் திருச்சி – நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1,000 கோடி
தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 314

0

0