நான் வரேன்.. அடுத்த திட்டத்தில் அதிமுக.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!

Author: Hariharasudhan
1 November 2024, 1:14 pm

நவம்பர் 6 அன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது.

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகை தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்று (நவ.1) வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், கட்சித் தலைமையின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

EPS 01

இதன்படி, வருகிற நவம்பர் 6ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, பொதுக்குழு கூட்டுவது, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!

தற்போது, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, 2026 தேர்தல் களத்தை யாருடன் இணைந்து எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்தும், இக்கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு மாவட்டங்களில் எப்படி உள்ளது என்பது குறித்தும் இதில் கருத்துகள் பகிரப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!