நீங்க சொன்ன பதவில யாரும் இல்ல… தேர்தல் ஆணையத்துக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 2:15 pm

தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வாங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

புலம்பெயர்ந்த மக்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த செயல் விளக்க கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 16-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பினார்.

குறிப்பாக, அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கூட்டத்தில் பங்கேற்குமாறு குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த கடித்ததை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுகொள்ள மறுத்துள்ளனர். மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவியில்லை என்று அந்த கடிதத்தை மீண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!