காதுவரை வாய் கிழிய பேசுவது அண்ணாமலை மட்டுமே.. இந்த சனிப்பெயர்ச்சி வேலை செய்யும்னு நம்புறேன் : எஸ்வி சேகர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 11:03 am

காதுவரை வாய் கிழிய பேசுவது அண்ணாமலை மட்டுமே.. இந்த சனிப்பெயர்ச்சி வேலை செய்யும்னு நம்புறேன் : எஸ்வி சேகர் விமர்சனம்!

தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க விமானம் மூலம் மதுரைக்கு வந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பேரிடர் காலங்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த அனுபவமும் இல்லாத மகனை, களத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.

நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்சன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அனுபவமுள்ள மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை அனுப்பாமல் பேரிடர் பற்றி அனுபவம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்யச் சொன்னது, தென் மாவட்ட மக்களிடம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என கூறியிருந்தார்.

அண்ணாமலையின் கருத்து குறித்து நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்வி சேகர் தனது X தளப்பக்கத்தில், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அனைத்து லெட்டர்பேடு கட்சிகள் உட்பட அனைத்து தலைவர்கள் நிர்வாகிகளை விட அனுபவமற்ற, காதுவரை வாய் கிழிய பேசுவது EX. IPS. மட்டுமே. இந்த சனிப்பெயற்சி வேலைசெய்யும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!