நீர்நிலைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றாதது ஏன்..? ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை அகற்றிய விவகாரத்தில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
14 May 2022, 9:05 pm
Annamalai Letter Stalin - Updatenews360
Quick Share

சென்னை : ஆர்ஏ புரம் குடியிருப்புகளை அகற்றிய தமிழக அரசு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றாதது ஏன்..? என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை – ஆர்.ஏ. புரம் கோவிந்தசாமி நகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, போலீசார் உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். வீடுகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளில் ஒருவரான கண்ணையன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஒவ்வொரு மக்களுக்கும் பா.ஜ.க, துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநரிடம் அழைத்து சென்று, தீர்வு காண முயற்சி செய்வோம். சென்னை ஆர்ஏ புரத்தில் வீடுகளை அவசர அவசரமாக வீடுகளை அகற்றியுள்ளனர். தமிழகத்தில் தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவேன் என முதல்வர் கூறுகிறார். இங்கு அவர் தான் வசிக்கின்றனர். அவர்கள் வீட்டிற்கும் சென்றிருக்க வேண்டும். அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏன் கேள்வி கேட்பது இல்லை.

அண்ணாமலை, பாஜ, ஆர்ஏபுரம்,

கார்பரேட், ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது. சாமானிய மக்களுக்கான ஆட்சி போல் தெரியவில்லை.ஆர்ஏ புரம் கட்டட விவகாரத்தில் முதல்வர் மாபெரும் தவறு செய்துள்ளார். இங்கிருக்கும் மக்களுக்கு தூரமான இடத்தில் டோக்கன் கொடுத்துள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி தீர்வு காணவேண்டும். குடியிருப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நியாயமாக நடந்து கொள்ளவில்லை, எனக் கூறினார்.

Views: - 585

0

0