திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமொரு அங்கீகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று முதலமைச்சர் பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 7:27 pm

தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும் மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 228

    0

    0