கோபத்தின் உச்சியில் நிதிஷ்குமார்… போன் போட்டு சமாதானப்படுத்திய ராகுல் காந்தி.. INDI கூட்டணியில் புகைச்சல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 11:46 am

கோபத்தின் உச்சியில் நிதிஷ்குமார்… போன் போட்டு சமாதானப்படுத்திய ராகுல் காந்தி.. INDI கூட்டணியில் புகைச்சல்!!!

4-வது இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்புகள் வெடித்தன. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தம்மை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவில்லை என்கிற கோபத்தில் இருந்தார்.

இதே கோபத்துடன் இந்தி மொழி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்ன தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் மீது சீறிய நிதிஷ்குமார் பாதியிலேயே கூட்டத்தல் இருந்து வெளியேறினார்.

இதேபோல பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்ததால் டெல்லி கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மமதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்ததால் லாலு கோபமடைந்தார் எனவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம், நிதிஷ்குமாருக்கும் லாலுவுக்கும் இடையே மோதல் உள்ளது எனவும் கூறப்பட்டது.

ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் யார் மீதும் அதிருப்தியில் இல்லை. ஊடகங்கள்தான் அப்படி எல்லாம் எழுதுகின்றன. எனக்கும் நிதிஷ்குமார் மீது கோபமோ அதிருப்தியோ இல்லை. இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் என்றார்.

இந்த நிலையில் நிதிஷ்குமாருடன் ராகுல் காந்தி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் எந்தெந்த விவகாரங்களில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் ராகுலின் இந்த முயற்சி பலன் தருமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!