பொதுமக்கள் கவனத்திற்கு…. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் … 5 நாட்கள் வங்கிகள் மூடல்… எப்போது தெரியுமா..?

Author: Babu Lakshmanan
26 January 2023, 9:50 am
Quick Share

வேலைநிறுத்தம், வார இறுதி என வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், வருகிற 30 (திங்கட்கிழமை), 31 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்தது. அதன்படி, வருகிற 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாட்களான இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா விடுமுறை, நாளை மறுதினம் 4வது வார சனிக்கிழமை விடுமுறை, அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இடைப்பட்ட நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மட்டுமே வங்கிகள் செயல்படும். வேலைநிறுத்தம், வழக்கமான விடுமுறை நாட்கள் என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டு இருப்பதால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது.

Views: - 372

0

0