ஸ்டிரைக் பண்றதுக்கு முன்னாடி இத கவனிங்க : ஊழியர்களுக்கு தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 10:01 am
Bus Strike - Updatenews360
Quick Share

நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும் எனவும், பணியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 229

0

0