பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… ரூ.10 லட்சம் சன்மானம் ; என்ஐஏ வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 6:25 pm

பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் நபர் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், கடையின் ஊழியர், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, வெடிகுண்டு வெடிக்கச் செய்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். அதேவேளையில், வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரூ – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் தொடர்பான துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது.

080-29510900, 8904241100 ஆகிய எண்களிலும், info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!