மகளிர் தினத்தில் சிறந்த பரிசு.. சிலிண்டர் விலை குறைப்புக்கு பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 11:28 am

மகளிர் தினத்தில் சிறந்த பரிசு.. சிலிண்டர் விலை குறைப்புக்கு பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும் தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!