வேடிக்கையா இருக்கு… அண்ணாமலை பற்றி உதயநிதி பேசலாமா..? விவாதம் நடத்த தைரியம் இருக்கா..? கரு. நாகராஜன் பதிலடி!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 8:28 am

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தகுதி இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறி இருப்பது வேடிக்கைத்தனமாக இருக்கிறது எனவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அமர்ந்து விவாதிக்க தகுதியற்ற ஒரு மனிதரெல்லாம் பேசுவதை கண்டுகொள்ள நேரமில்லை என பா.ஜ.க துணை தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி மதுபான கடையிலிருந்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறார்கள். அந்த வருமானத்தை வைத்து தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை ஒழியுங்கள். அதற்கு மாற்று வழியாக கிடைக்கும் வருமானத்தை பாஜக தரப்பில் இருந்து வெள்ளையருக்கையாக தருகிறோம் எனக் கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நாங்கள் உருவாக்கி இருக்கும் மாற்று வழி வெள்ளை அறிக்கையை தமிழக முதலமைச்சருடன் தருவதற்கு தேதி கேட்டு இருக்கிறோம். அந்த தேதியை ஒதுக்கும் பொழுது நாங்கள் தர இருக்கிறோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எட்டாம் தேதி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். தமிழக அரசு முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை கூறி இருப்பதாக கூறுகிறது. ஆனால் பள்ளிக்கூடங்கள், கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மதுக்கடைகளை இதுவரை மூடப்படவில்லை.

ஒரு புறம் மதுக்கடைகளை குறைப்பதாக சொல்கிறார்கள். ஒருபுறம் மதுக்கடை வருவாய் அதிகரிக்க வழி செய்கிறார்கள். திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழ்நாட்டின் மதுவிலக்கு முதலில் கொண்டு வந்தால் நாம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தகுதி இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறி இருப்பது வேடிக்கைத்தனமாக இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அமர்ந்து விவாதிக்க தகுதியற்ற ஒரு மனிதரெல்லாம் பேசுவதை கண்டுகொள்ள நேரமில்லை.

2.50 லட்சம் ரேஷன் கார்டு உள்ளது. இதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுத்தாலே ஒரு கோடி ரேஷன் பெண்கள் பயன்பெறுவார்கள். பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்குவதிலும் குளறுபடிகள் நிறைந்த ஆட்சியாளர்கள், எவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள், என தமிழக பாஜக துணை தலைவர் கேள்வி எழுப்பினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!