சுவர் ஏறி குதிச்சு உள்ளே வந்தாங்க… கைது செய்யும் போது எனக்கு நெஞ்சு வலி எதுவும் வரல… ; பாஜக நிர்வாகி SG சூர்யா கிண்டல்!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 10:42 am

ராமநாதபுரம் ; கைது செய்யப்பட்ட முறையே தவறு சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் வந்து கைது செய்ததாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு பாஜகவின் 9-ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியில் வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சூர்யா கலந்து கொண்டார்.

கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கைது செய்த முறையே தவறு. ஏழு வருடத்திற்கு குறைவான தண்டனை இருக்கக்கூடிய எந்த கைதியையும் கைது செய்ய வேண்டுமானால், முதலில் சம்மன் அனுப்ப வேண்டும். வாரண்ட் காட்ட வேண்டும். தகவல் அளிக்க வேண்டும்.

இதை எதையும் பின்பற்றாமல் சுவர் ஏறி குதித்து வந்து பொய் சொல்லி கீழே வரவழைத்து கைது செய்தனர். எதற்காக கைது செய்கிறோம் என்று தகவலை கூட சொல்லாமல் கைது செய்தனர். இந்திய சட்டத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராகவும் இருந்ததாலே கைது குறித்து கேள்வி எழுப்பினோம்.

500 காவல்துறையை மதுரையிலிருந்து சென்னைக்கு அனுப்பி என்னை கூட்டி வருவதற்கான காரணம் என்ன..? ஒரு சம்மன் அனுப்பி இருந்தால் நானே காவல் நிலையம் வந்திருப்பேன். ஆகவே, இவர்கள் கைது செய்த விதம் தவறானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது.

கைது என்று சொன்னவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி போல நெஞ்சு வலி என நாடகம் ஆடவில்லை. சிறுநீர் கழிக்கவில்லை. மருத்துவமனை சென்ற பிறகு ஐந்து வகை சட்னியுடன் இட்லி கேட்கவில்லை. எங்களை கைது செய்யும் பொழுது அடம் பிடிக்கவில்லை. நெஞ்சு வலி என கூறவில்லை. நெஞ்சுரத்துடன் சென்றோம்.

அதிகாரிகளை தள்ளி விடுகின்றனர், அரசாங்க அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!