ஆவினில் கொள்ளையடிக்கும் பணம் CM ஸ்டாலினுக்கா..? இல்லை அவருடைய மருமகன் சபரீசனுக்கா..? : எச். ராஜா கேள்வி…!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 5:19 pm
Quick Share

மதுரை : தமிழக அரசு கார்ப்பரேட் அரசாங்கம் 35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு காண்ட்ராக்ட் கொடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் ஸ்டாலின் அரசானது அதானியின் கைக்கூலி அரசாங்கம் என்று எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து, இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் 75 என்ற வடிவில் நின்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 75வது சுதந்திர தினத்தை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என பாரத பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். வருகின்ற 13ம் தேதி காலையில் தொடங்கி 15ம் தேதி வரை மூன்று நாட்கள் ஒவ்வொருவரும் தேசிய கொடியை தனது வீடுகளில் ஏற்ற வேண்டும்.

மேலும், தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடிகள் ஏற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளன.வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும், என பாரதிய ஜனதாவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேசியக் கொடிகளை ஏற்றுவதற்கு மத்திய அரசு சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கதர் துணியில் மட்டும் தான் தேசியக்கொடி தயாரிக்க வேண்டும் என்கின்ற நிலையை மாற்றி எல்லா துணிகளில் குறிப்பிட்ட அளவில் தேசியக் கொடியை தயாரிக்கலாம். தேசிய கொடியை விற்பனை செய்வதற்கு எந்த ஒரு வரி விதிப்பும் இல்லை. தேசிய கொடியை இரவு நேரங்களில் பறக்க விடக்கூடாது என்ற விதிகளை திருத்தம் கொண்டு வந்து இரவு நேரங்களிலும் தேசிய கொடியை பறக்க விடலாம்.

ஆனால், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் மட்டும் தேசியக்கொடியை ஏற்றி விடக்கூடாது, இது போன்ற விதிகளில் எவ்வித திருத்தமும் இல்லை. பல்வேறு இடங்களில் தேசியக்கொடி விநியோகமும், அதே போல் வந்தே மாதரம் பேரணியும், பேரணியில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட உள்ளது,என தெரிவித்தார், எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து H.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- எதற்குமே ஒரு கொடுப்பினை வேண்டும். 50 ஆண்டு சுதந்திர தினம் வந்த பொழுது LK.அத்வானி அவர்களின் சுவர்ண ஜெயந்தி ரத யாத்திரை நாடு முழுவதும் நடத்தினார். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம்.

இப்பொழுது 75-வது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நூறாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் பொழுதும் இதே அரசாங்கம் தொடர்ந்து கொண்டாடும். இதுதான் இந்த அரசின் கொடுப்பினை என்று கூறினார்.

இந்து முன்னணியின் உரிமை மீட்பு மாநாட்டில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரது வீட்டிற்கு போலீஸ் மிரட்டுவதற்கு சென்றது. ஆனால், நடராஜரை இழிவுபடுத்தி பேசியவரின் வீட்டிற்கு பாதை தெரியவில்லையா..? காவல்துறையினருக்கு. ஆண்டவரை இழிவுபடுத்தி பேசலாம். நேற்று பிறந்த மனிதனை இழிவுபடுத்தி பேச கூடாதா..? இதில் என்ன தவறு உள்ளது.

ஆண்டவர் நடராஜரை பற்றி இழிவாக பேசியவரை கைது செய்ய துப்பில்லாத திராணி இல்லாத தமிழக காவல்துறை, கனல் கண்ணன் வீட்டிற்கு சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு முட்டாள் தன் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மாட்டான். தமிழ்நாடு காவல்துறையின் தமிழக அரசை போல அப்படித்தான் உள்ளது என்று கூறினார்.

போலி பாஸ்போர்ட் புகழ் டேவிட் ஆசீர்வாதம் கமிஷனராக இருந்த பொழுது, அதிகமாக போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. இது தமிழக காவல்துறையின் பாரம்பரியம், தேச விரோதமாக நாட்டின் இறையாண்மைக்கு நாட்டு நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நான் ஆதாரமில்லாமல் பேசமாட்டேன். நடிகரும் சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் என்பவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்று மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன், எனக் கூறினார்.

அவருக்கு கருத்து உரிமை கிடையாதா என்று கேள்வி எழுப்பிய அவர், கருத்துரிமையை தடுப்பதற்கு டிஜிபி சைலேந்திரபாபு யார்.? டேவிட்சன் தேவாசீர்வாதம் யார்.? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூரில் கிறிஸ்துவ பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதைப் பற்றி இதுவரை செய்திகளிலோ, ஊடகங்களோ விவாதம் நடைபெறவில்லை. செய்தி நிறுவனங்களே சுதந்திரம் இல்லாமல், கருத்து சுதந்திரம் இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது.

மயிலாடுதுறையில் ஜூன் 12ஆம் தேதி விடுதலை சிறுத்தை குண்டர்கள் சாரணி என்ற பெண்ணை கடத்த முயற்சி பண்ணி இருக்காங்க. கடத்தல் தடுப்பதற்கு முயன்ற பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்களை அவர்கள் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மீண்டும் அந்தப் பெண் கடத்தப்பட்டு இருக்கிறார்.

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து விசாரணை செய்த போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தனது மவுனத்தை பதிலாக அளிக்கின்றனர். பால் கெட்டுப் போனதுக்கு பிறகு என்ன பிரயோஜனம், அடிடா குதிரை லாயத்தை விட்டு வெளியே சென்ற பிறகு லாயத்தை போடுவது என்ன பிரயோஜனம். இவ்வளவு மோசமான கையால் ஆகாத ஒரு காவல்துறை தேசிய சக்திகளுக்கு எதிராக மிரட்டல் நடவடிக்கை, சட்ட ஒழுங்கு பிரச்சனையில் அமிஞ்சிக்கறியில் இளநீர் வெட்டுவது போல் தலையை வெட்டுகின்றனர்.

இது தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கு தெரிந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை எஸ்சி அணி மாவட்ட தலைவர் கே.பாலச்சந்தர் பட்டப்பகலில் கொல்லப்படுகிறார். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலுக்கு காரணம் காவல்துறையை முழுக்க முழுக்க திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதே காரணம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.

தேசிய சக்திகளுக்கு எதிராக உங்கள் மிரட்டல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். ஆயிரம் கனல் கண்ணன் கருத்து சொன்னால், தமிழகம் அரசு என்ன செய்யும். டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், இவர்கள் யார் ஆசிர்வாதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. தேசிய சக்திகளுக்கு எதிராக செயல்படும் உங்கள் மிரட்டல் போக்கை தவிர்த்து விடுங்கள். உங்கள் வேலைகளை பார்த்தால் நல்லது.

ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் கலந்து கொண்ட நீதித்துறை அமைச்சர் முதல் முறை வளைகாப்புக்கு சென்று விட்டார். இரண்டாவது முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலிங் கலந்து கொண்டார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுகளை யார் எடுக்கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது முதல் இரண்டு கொள்கைகளை கடைபிடிக்கப்படுகிறது. இன்கம் நியூட்ரியாலிட்டி, நம் நாட்டின் 32 விதமான வரிகள் இருந்தது. 32 வரிகளை ஒன்றாக ஆக்கியுள்ளோம். 2.25 விலை 2.7 விலை என பல்வேறு விலை மாற்றங்கள் உள்ளன. 36 வகையான விலைகள் உள்ளது. இதனை நான்கு வகையில் கொண்டு வந்துள்ளோம்.

ஜிஎஸ்டி பற்றி மாநிலக் கட்சித் தலைவர்களோ அல்லது மாநில அமைச்சர்களோ பேசுவதற்கு அருகதை இல்லை. 1200 வகையான உற்பத்தி பொருட்கள் உள்ளது. இதில் அனைத்திற்கும் வரி விகிதத்தை பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா அல்லது மோடியோ, நிர்மலா சீதாராமன் அமைச்சரோ முடிவு செய்யவில்லை. கருத்து ஒற்றுமையுடன் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் ஒருமித்த கருத்தோடு தான் முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி பற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினால், முறை தவறி பேசுகிறார். சட்டம் தெரியாமல் பேசுகிறார். ஒன்று அறியாமையால் பேசுவது இல்லை என்றால், ஆணவத்தில் பேசுவது. இதற்கு எப்படி பாரத பிரதமரோ அல்லது மத்திய அரசோ பொறுப்பேற்க முடியும். இவர்கள் பேசுவது பொறுப்பற்ற பேச்சு. ஜிஎஸ்டி வரி உயர்வு என்பது தரம் வாய்ந்த பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. நடிகரை வைத்து நீங்கள் நாடு முழுவதும் விளம்பரம் செய்தீர்கள். அதற்கு இதுவரை வரி விதிப்பு செய்யவில்லை.

100 ரூபாய் விக்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை ஐந்து சதவீதம் வரி உயர்வு செய்தால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 120 ரூபாய்க்கு ஏன் விற்கிறீர்கள்.? 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா..? அல்லது அவரது மருமகன் சபரீஷனுக்கு போகிறதா..? அல்லது சின்னவர் என்று சொல்லக்கூடிய உதயநிதி ஸ்டாலினுக்கு போகிறதா என்று நக்கல் செய்தார்.? யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு. இது தமிழகத்தில் கொள்ளை ஆட்சி. வரி உயர்வு செய்தால் அதனை 150 ரூபாய்க்கு தான் விற்க வேண்டும் 15 ரூபாய் மக்கள் பணத்தை சுரண்டுவது ஸ்டாலின் அரசு.

ஏழை மக்கள் இட்லி மாவு வாங்குபவர்களுக்கு வரி இல்லை. ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தமிழக அரசு கார்ப்பரேட் அரசாங்கம் 35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு காண்ட்ராக்ட் கொடுத்துள்ள அரசு. தமிழகத்தில் ஸ்டாலின் அரசானது அதானியின் கைக்கூலி அரசாங்கம். 5g ஏலம் முழுவதுமாக நிறைவுற்றதா.? திமுக சொல்லும் திருடன் ஓடுறான் ஓடுறான் என்று திருடனே சொல்லிக் கொண்டு ஓடுவான். அது திருடர்களுடைய குணம். 5g அலைக்கற்றை முழுவதுமாக முடிந்து விட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். இதுவரை 1.65 லட்சம் கோடி ரூபாய் விற்பனையாகி இருக்கிறது. இன்னும் அதிகமாக போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்குள்ளாக திமுகவினருக்கு வக்கீலாக வேண்டாம்.

2004 ஆம் ஆண்டு பாஜகவின் ஆட்சி முடியும்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 34 ரூபாய்க்கு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சி அமரும்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய்க்கு விற்றது. பத்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் கூடுதல் வரியை ஏற்றவில்லை என்று சொன்னாலும், எப்படி சராசரி விகிதத்தை விட கூடுதலாக விற்பனையானது, என்று கேள்வி கேட்டார்.

தற்போது பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இரு மடங்காக பெட்ரோல், டீசல் விலை விற்பனையாகிறது என்று கேள்வி கேட்டு பொதுமக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்வது இனிமேல் எடுபடாது என்று தெரிவித்து இன்று செய்தியாளர்கள் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும், உங்கள் நலம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

Views: - 122

0

0

Leave a Reply