திமுகவை வீழ்த்த மெகா பிளான் போட்ட பாஜக.. ஆயத்தமாகும் அண்ணாமலை : முக்கிய ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 11:47 am

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல உள்ளார்.

ராமேஸ்வரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாத யாத்திரை செல்லும் வழித்தடங்கள், அந்த பகுதிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், மாவட்டங்களில் கட்சி வளர்ப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ள விபரங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!