மீண்டும் மீண்டும் வெடிக்கும் அண்ணா விவகாரம்… ஜெயக்குமார் இப்படி பேசலாமா..? கருநாகராஜன் கொடுத்த ரிப்ளை

Author: Babu Lakshmanan
16 September 2023, 1:39 pm

அண்ணா குறித்து அண்ணாமலை தவறான நோக்கத்தோடு பேசியதாக வெளியே பேசக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கருநாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்த நாளையொட்டி, தமிழக பாஜக சார்பில் கருநாகராஜன், வி.பி.துரைசாமி ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- சில சரித்திர நிகழ்வுகளை அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாவை குறை சொல்ல வேண்டும்; அவரின் புகழுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்று மாநில தலைவர் மட்டும் அல்ல.. எங்கள் கட்சியில் எந்த தலைவர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.

இது தவறான பிரச்சாரமாக ஆகிவிடக் கூடாது. இது ஜெயக்குமாருக்கு நன்கு புரியும். அண்ணாமலை தவறான நோக்கத்தோடு பேசியதாக வெளியில் பேசக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன், எனத் தெரிவித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!