‘என் செருப்பு சைஸ் 41… தைரியம் இருந்தா நேருல வா ; இது தான் திமுக தொண்டனின் இலட்சணம்’ ; குஷ்பு ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 8:51 am

டுவிட்டரில் தன்னை அவதூறாக பேசிய திமுக தொண்டருக்கு பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

1990ம் ஆண்டு நடிகைகளில் முன்னணி நடிகையான குஷ்பு, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

Kushboo - Updatenews360

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு குஷ்பு தனது அண்ணனின் உடல்நிலை குறித்து டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார் குஷ்பு. அதில், “தனது அண்ணனுக்கு உடல் நலம் சரியில்லை. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்,” எனக் கூறியிருந்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக, அவரது அண்ணன் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து டுவிட்டரில் தனது துக்கத்தை பகிர்ந்து கொண்ட குஷ்பு, “உங்களது அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவிற்கு அவர்கள் விடைபெறும் நேரமும் வரும். எனது சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவரது அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வாழ்க்கையின் பயணமானது கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது,” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

குஷ்புவின் இந்தப் பதிவிற்கு திமுக தொண்டர் ஒருவர், “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்துருச்சு,” என்று கிண்டலாக கமெண்ட் பதிவிட்டிருந்தார்.

இதனால் கடும் கோபமான குஷ்பு, “என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தால் நேரில் வா. இதுதான் உங்கள் கீழ் தனமான புத்தி. மாறவே மாட்டீங்களாடா. நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும். இதுதான் திமுக தொண்டனின் இலட்சனம். இதைவிட கீழ்த்தரமாக இருக்க முடியுமா..? என கடுமையாக பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் அந்த கமெண்டை டெலீட் செய்து ஓடி விட்டார். தற்போது, குஷ்புவின் டுவிட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!