CM ஸ்டாலினுக்கு அதிகாரமே கிடையாது… PTR-ஐ தொடர்ந்து நா.கார்த்திக்… கிளறி விடும் அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 6:55 pm

கோவை திமுக மாவட்ட செயலாளரின் ஆடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் பற்றியும் கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், ஒரு வீட்டிற்கு பத்து வாசல் இருக்கக் கூடாது என்றும், அரசியலில் இவர்தான் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும் என அவர் கூறுவது போல உள்ளது. மேலும், ஜெயலலிதா இருக்கும்போது, 100 பேரைக் கட்சியை விட்டு நீக்கினாலும் அந்த அறிவிப்பும் ஜெயலலிதாவின் பெயரில்தான் வரும் என்றும், கண்டவர் எல்லாம் அந்த வீட்டிற்குள் நுழைந்து விட முடியாது என முதலமைச்சர் ஸ்டாலினின் அதிகாரம் குறித்து அவர் விமர்சித்திருந்தார்.

அதேபோல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சியிலேயே எங்கிருப்பார் என தெரியாது கட்சிக்காரர்களே கூறுவதாகவும், நடக்கும் அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிருப்பதாக நா.கார்த்திக் பேசியதாக சொல்லும் ஆடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், கோவை மாநகராட்சிக்கு பெண் ஒருவரை மேயராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர், நேரு எப்போதும் நுனிப்புல்லை மட்டும்தான் மேய்ந்து கொண்டே ஓடிக்கொண்டிருப்பார் என்றும், அவர் சரியாக இருந்திருந்தால் டீ லிமிடேஷன் எப்போதே நடந்து முடிந்திருக்கும் என சீனியர் அமைச்சரையும் விளாசியிருந்தார்.

அதிமுக கோட்டையான கோவை மாவட்டத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று துடிக்கும் திமுகவின் தலைமையை, அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவரே விமர்சித்திருப்பது போன்ற ஆடியோ வெளியாகி, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த ஆடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சராக இருப்பவரிடம் அதிகாரம் கிடையாது என்றும், மகன், மகள், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் நண்பர்கள், மகனின் பினாமிகள், மாவட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள் ஆகியோரின் ஆட்சியே, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சி!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?