அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதிக்கு சிக்கல்… ஆளுநரிடம் புகார் அளித்த பாஜக ; அதிர்ச்சியில் திமுக..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 12:10 pm
Quick Share

சென்னை ; சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு மீது ஆளுநரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும் என்றும், அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது என தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களில் புகாரும் அளித்து வருகின்றனர். இதனிடையே, அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்தநிலையில் பாஜகவினரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக உதயநிதி அறிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட X தளப் பதிவில் கூறியதாவது :- சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

Views: - 231

0

0