AIMS Vs Agri Univ… திமுகவில் வேணும்னா அப்படி நடக்கலாம்… ஆனால், 2026ல் அது உறுதி ; உதயநிதிக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 8:27 am

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் காலத்தை நீட்டித்ததை விமர்சித்த அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் காலத்தை நீட்டித்தது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால், மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?

எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கலை பிடித்த அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பதிவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம்.

திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைப்பது உறுதி.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன், எனக் கூறியுள்ளார். அதோடு, Agri University என எழுதப்பட்ட செங்கலை பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலையின் இந்தப் பதிவை தொடர்ந்து, பாஜக – திமுகவினர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!