விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக… மறுபுறம் கரும்பு கொள்முதல் விலையை ரூ.340ஆக உயர்த்திய மத்திய அரசு ; அண்ணாமலை

Author: Babu Lakshmanan
22 February 2024, 9:34 am

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் மத்திய அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக உயர்த்தி வழங்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியல் வரவேற்பை பெற்றுள்ளது.

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் மத்திய அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக, திமுக, விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!