‘இந்த ஆணவம் தான் திமுகவை அழிக்க போகிறது’… திமுக எம்பி செந்தில் குமார் சர்ச்சை பேச்சு ; பொங்கி எழுந்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 6:21 pm

திமுக எம்பி செந்தில்குமார் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு பூமிபூஜை போடும் திமுகவினரின் செயலை தனியொரு ஆளாக எதிர்ப்பார். இதனால், சொந்த கட்சியிலேயே சில எதிர்ப்புகளை கொண்டிருப்பார்.

மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் இவர் தற்போது நாடாளுமன்றத்தில் பேசியது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் எழச் செய்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இது தொடர்பாக பாஜக எம்பி செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அவர் கூறியதாவது :- இந்தி இதயப் பகுதியாக இருக்கும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. அதாவது, ‘கௌ முத்ரா’ என அழைக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே பாஜக தேர்தல்களில் வெற்றி பெறும்.

தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது, எனக் கூறினார்.

இந்திய இதயப் பகுதி மாநிலங்களை கௌ முத்ரா மாநிலங்கள் என்று திமுக எம்பி குறிப்பிட்டு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த அண்ணாமலை, தி.மு.க.வின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதைப்போலவே, நாடாளுமன்றத்தில் & அதுபோலவே நாடாளுமன்றத்தில் அவர்களின் பேச்சு உள்ளது. வட இந்திய நண்பர்களை பானி பூரி விற்பவர்கள், கழிப்பறை கட்டுபவர்கள் என எனக் கூறி வந்த INDI கூட்டணியைச் சேர்ந்த திமுக எம்பி, தற்போது கௌமுத்ரா என்று பேசி புதிய சர்ச்சை உருவாக்கியுள்ளார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும், கர்நாடகாவில் முந்தைய ஆட்சியில் பாஜக இருந்ததையும் திமுக எம்பி மறந்து விட்டார் போலும். திமுகவினரின் இதுபோன்ற ஆணவ பேச்சுக்களே, அக்கட்சி அழிந்து போக முக்கிய காரணமாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?