ஆளுநராகிறாரா நடிகர் ரஜினிகாந்த்..? அடுத்தடுத்து நடக்கும் டுவிஸ்ட்… வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
17 August 2022, 9:05 pm
Quick Share

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த உடனே, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும், அரசியல் குறித்து வெளிப்படையாக எப்போதும் கருத்து கூறாத ரஜினி, அன்றைய தினம் ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று பளீச்சென கூறினார்.

ஆளுநர் ரவியுடன் அரசியல் பேச ரஜினிக்கு என்ன காரணம் வந்தது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கின்றனர்.

எனவே, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, பிரதமர் மோடி, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகின.

தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.

Views: - 160

0

0